கொழும்பு – கண்டி – காலி – தம்புள்ளை அணிகள் மோதும் மாகாண மட்ட கிரிக்கெட் தொடர்

114

இலங்­கையின் தேசிய அணி வீரர்­களும் உள்ளூர் கழக மற்றும் இளையோர் அணி வீரர்கள் ஆகியோர் ஒரே அணியில் விளை­யாடும் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் இரண்­டா­வது தட­வை­யாக நடத்தும் இந்தத் தொடரில் மொத்தம் நான்கு அணிகள் பங்­கேற்­கின்­றன.

‘சுப்பர் ப்ரொவின்ஸல் தொடர் ‘என்ற பெயரில் விளை­யா­டப்­படும் இந்தத் தொடரின் அறி­மு­க­விழா நேற்று நடை­பெற்­றது.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்­புள்ளை ஆகிய நான்கு அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்­கேற்­க­வுள்­ளன.

எதிர்­வரும் ஜுன் மாதம் மேற்­கிந்­திய தீவு­களில் நடை­பெ­ற­வுள்ள டெஸ்ட் தொடர் மற்றும் பங்­க­ளா­தேஷில் நடை­பெ­ற­வுள்ள இலங்கை ‘ஏ’ அணியின் சுற்­றுப்­ப­ய­ணங்­களை இலக்­காகக் கொண்டு இப்­போட்டித் தொடர் நடத்­தப்­ப­டு­கின்­றது.

இதன்­படி, இம்­முறை போட்டித் தொடரில் தேசிய அணி வீரர்­க­ளோடு சுமார் 80 வீரர்கள் கள­மி­றங்­க­வுள்­ளனர்.

இதில் கொழும்பு அணியின் தலை­வ­ராக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்­தி­மாலும், கண்டி அணிக்கு இலங்கை ஒரு நாள் மற்றும் இரு­ப­துக்கு 20 அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தி­யூஸும், காலி அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் உப­த­லைவர் சுரங்க லக்­மாலும், தம்­புள்ளை அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் திமுத் கரு­ணா­ரத்­னவும் தலை­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நான்கு நாட்கள் கொண்ட போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்ள இம்­முறை போட்டித் தொடர் கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்­தக வலய கிரிக்கெட் மைதானம், ஹம்­பாந்­தோட்டை மைதானம் மற்றும் தம்­புள்ளை ரங்­கிரி மைதானம் என்­ப­வற்றில் நடை­பெ­ற­வுள்­ளன. ஒவ்­வொரு அணியும் தங்­க­ளது எதி­ர­ணி­க­ளுடன் தலா ஒரு முறை மோத­வுள்­ளன.

அத்­துடன், இந்தத் தொடரின் இரண்டு போட்­டிகள் பக­லி­ரவு போட்­டி­க­ளாக நடை­பெ­ற­வுள்­ளன.

நேற்று நடை­பெற்ற அறி­மு­க­வி­ழாவில் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால பேசு­கையில், இங்­கி­லாந்தின் கவுண்டி மற்றும் இந்­தி­யாவின் ராஞ்சி போட்டித் தொடர் போல இலங்­கையில் நடத்­தப்­பட வேண்டும் என்­பதே எமது நோக்கம்.

அந்­த­வ­கையில் இந்த நான்கு நாட்கள் கிரிக்கெட் எமக்கு சிறந்­த­தொரு ஆரம்­ப­மாக அமையும் என்று நம்புகின்றோம்.

அத்தோடு இளம் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளை யாடிய அனுபவம் பெற்ற மூத்த வீரர்களுடன் விளையாடுவதால் அவர்களின் எதிர்காலத்திற்கு அது உதவியாக இருக்கும் என்றார்.

SHARE