களனி கங்கைக்கு அருகே வசிக்கும் அனைத்து மக்களும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மழை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் வரலாற காணாத ரீதியில் உயர்ந்து வருகிறது. வினாடிக்கு சாதாரணமாக 40 கனஅடி செல்லும் நீர் தற்போது 1500 கனஅடிக்கும் அதிகமாக செல்வதால் வெள்ளம் ஏற்பட கூடிய சத்தியம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
எனினும், பலர் இன்னும் வெளியேற முடியாத நிலையில் வீட்டு கூரைகளில் இருப்பதாகவும், அவர்களுக்கு உணவு, மருந்து போன்றவை அவசர தேவையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த மக்களை மீட்பதற்கான உதவிகளை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது பிரதேச மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் இந்த பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.