கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் போராட்டம்

105

 

தேசிய கண் வைத்தியசாலையில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (14.12.2023) இடம்பெறவுள்ளதாக சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேலைநிறுத்தம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிருவாகியின் முறைகேடுகள்
வேலைநிறுத்தம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கண் வைத்தியசாலையின் பிரதம நிருவாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE