கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் கட்டணம் மாதமொன்றுக்கு 28 மில்லியன்!

225

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் கட்டணம் மாதமொன்றுக்கு 28 மில்லியன் ரூபா என வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எகோ பவர் லங்கா பொறியியற்துறை நிறுவனம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சூரிய சக்தியினால் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியொன்றை அன்பளிப்புச் செய்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்பொழுது ஒரு கட்டடத்தில் மாத்திரம் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி இயந்திரம், வைத்தியசாலையின் சகல கட்டடங்களிலும் பொருத்த எதிர்பார்த்துள்ளதாகவும் இதனால், மின் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE