கொழும்பு நகருக்குள் அவதானம்! மீறினால் சட்ட நடவடிக்கை

253

625.256.560.350.160.300.053.800.461.160.90

கொழும்பு நகருக்குள் குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசி எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வாகனங்களில் செல்லும்போது வீதிகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசுவதால் தொற்று நோய்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE