கொழும்பு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் நவராத்திரி விழா

142
(பா.திருஞானம்)
 
கொழும்பு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் நவராத்திரி விழா இன்று (16.10.2018) நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி கலாநிதி ஜயந்தி குணசேகர தலைமையில்  வெகு விமரிசையாக நிறுவகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் உட்பட சமய பெரியார்கள் நிறுவகத்தின் அதிகாரிகள் விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் பூஜைகளுடன் “ஆயதனம்” நூல் வெளியீடும் நடைபெற்றது.
SHARE