ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் உள்ள கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்களின்ஒரு குழுவினர் மாநகர ஆணையாளரை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேல்மாகாண ஆளுநர் கே சி லோகேஸ்வரனிடம் மனு ஒன்றை நேற்றுகையளித்துள்ளனர்
மாநகரசபையில் உள்ள 53 உறுப்பினர்களில் 47பேர் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.
ஆணையாளர் வி கே ஏ அனுர ஏதேச்சையான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறியே இந்தகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் ஆணையாளரால் எவ்விதநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று எதிர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.