கொழும்பு மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அதி உச்ச பாதுகாப்பு.

311

கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும், நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பாதுகாப்பு குறித்து உரிய கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Colombo

SHARE