அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச் செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.
இவர் இன்று சிறிலங்காவின் அரசாங்க மற்றும் தனியார் துறையினருடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சிறிலங்காவுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கிலேயே சார்ள்ஸ் எச்.றிவ்கின் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.