கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம, பேரலந்த ரயில் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிலாபத்தில் இருந்த கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் பாதுகாப்பு கடவை மூடியிருந்த நிலையில் அதன் ஊடாக பயணக்க முயற்சித்த இருவரே இவ்வாறு ரயிலில் மோதுண்டுள்ளனர்.
கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.