கொவிட்-19 நிமோனியா தொற்றால் பெண் ஒருவர்மரணம்

131

 

சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழந்ததையடுத்து, மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொவிட் -19 தொற்று உறுதி
பிரேத பரிசோதனையின்போது, அவர் கொவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொவிட் -19 மரணம்
கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவர் கடந்த (23) திகதி உயிரிழந்தார்.

குறித்த நபர் கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

SHARE