ரஜினியின் ‘கோச்சடையான் படம் வருகிற 9–ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படம் வெற்றி பெற ராமேஸ்வரம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் 1008 சங்கு பூஜை நடத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் பாலநமச்சி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக பரிவார் பவுண்டேஷன் ஜெனரல் மானேஜர் தெய்வம் மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிவகாசி ரமேஷ், மாரி பிச்சை, முருகன், சசிகுமார், குணா, சங்கிலி முருகன், ராமநாதன், பரமக்குடி ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், கண்ணதாசன் போன்றோர் கலந்து கொண்டனர். கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இது குறித்து பால நமச்சி கூறும் போது, ரஜினி உடல் நலம் குன்றி இருந்த போது அவர் நலம் பெற வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் 3–ம் பிரகாரத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினோம். தற்போது கோச்சடையான் வெற்றி பெற சங்கு பூஜை நடத்தி உள்ளோம். படம் வெற்றி பெற்றதும், ராமேஸ்வரம் கோவில் ஏர்வாடி, தர்கா, சர்ச்களில் 10 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படும்.
விரைவில் ராமேஸ்வரம் தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் கொடுப்போம் என்றார்.