கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் சீருடையை மாற்றி சாதாரண உடையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த தேர்தல் காலத்தில் அரச நிறுவனமான ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் 500 பேர் வரை நுகேகொடை, மஹரகமை, மற்றும் கெஸ்பேவ ஆகிய பிரதேசங்களில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.