முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை தாம் தடுத்து நிறுத்தியதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் அவர் நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவன்ட் கார்ட் வழக்குத் தொடர்பில் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படவிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தாம் அந்த விடயத்தில் தலையீடு செய்து கோதபாய கைது செய்யப்படுவதனை தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
கோதபாயவை கைது செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கூறியதாகவும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் பணிப்புரை விடுத்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திலோ அல்லது ஆயுத சட்டத்திலோ எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியாது என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே சட்ட மா அதிபரின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.