கோப்பாய் செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்ட பெண் கைது

99

கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின்போதே இன்று (08.01.2024) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் மீட்பு
இதன்போது கைது செய்யப்பட்ட 35 வயதான சந்தேகநபரின் வீட்டில் இருந்து100 கிராம் கஞ்சாவும் 10 லீற்றர் கசிப்பும் ஒரு தொகை பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE