கோப்பி தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

306

காலையில் அதிகளவு உற்சாகத்தை தருகின்ற பானமாக கோப்பி விளங்குகின்றது.

உலகளவில் 124 வகையான கோப்பி இனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் இரண்டு வகையான கோப்பி இனங்களே பானமாக உள்ளெடுக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இப்படியிருக்கையில் இவ் வகை கோப்பி தாவரங்கள் விரைவாக அழிவடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகளவில் காணப்படும் ஐந்தில் ஒரு தாவரங்கள் விரைவாக அழிவடைந்து வருவதாகவும், அவற்றுள் 60 சதவீதமானவை மிக விரைவாக அழிவடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அழிவடையும் தாவர வகைகளில் மேற்குறித்த கோப்பி இனங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அதிர்ச்சி தகவலை Dr Aaron Davis என்பவர் வெளியிட்டுள்ளார்.

SHARE