கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல் 

265

ஜேர்மனி நாட்டில் சீக்கிய கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று வாலிபர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியில் தற்போது சுமார் 13 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர்.

மேற்கு Essen நகரில் உள்ள சீக்கிய கோயிலில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமண நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

அப்போது, கோயிலின் முகப்பு பகுதியில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன, இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயிலில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணை தொடங்கியபோது 17 வயது நிரம்பிய 3 வாலிபர்களை பொலிசார் கைது செய்தனர்.

மேலும், மூவரிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மூவரின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, மூவரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

பின்னர், மூவரில் ஒருவருக்கு 7 ஆண்டுகளும், மற்ற இருவருக்கு 6 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

SHARE