கோரக்பூரில் ஜூலை மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

205

உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் நான்கு குழந்தைகள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளனர். இந்த குழந்தைகள் மரணத்திற்கும் மூளையழற்சி நோயே காரணம் என மருத்துவமனைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மரண சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் நான்கு குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அந்த மருத்துவமனையில் இந்த ஆண்டு பலியான குழந்தைகள் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

SHARE