ஜெயம் ரவி நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் மிருதன். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால், இதனால் இப்படத்திற்கு எந்த இடத்திலும் வசூல் குறையவில்லை, படம் வெளியான 3 நாட்களில் ரூ 20 கோடி வரை வசூல் செய்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் ஜெயம் ரவியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
இப்படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் வராத விண்வெளியை பின்புலமாக கொண்டதாம். இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகின்றது.