தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஹீரோக்கள் தான் ரூ 20 கோடி வரை சம்பளம் பெறுவார்கள். ஹீரோயின்கள் கோடியை தொட பல வருடம் ஆகும்.
அந்த வகையில் தற்போது கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான். இவர் ஒரு படத்திற்கு ரூ 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.
இதற்கு அடுத்த இடத்தில் அனுஷ்கா, ஸ்ருதி ரூ 1.5 கோடி, காஜல்,ஹன்சிகா, தமன்னா ஆகியோர் ரூ 75 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர்.
த்ரிஷா குறைந்தது ரூ 75 லட்சம் வரை பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.