கோல் மழை பொழிந்த பிரித்தானிய அணி! சாதனை படைத்த எகிப்திய ஜாம்பவான்

41

 

யூரோப்பா லீக் தொடரில் லிவர்பூல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பார்ட்டா பிரஹா அணியை வீழ்த்தியது.

ஆன்ஃபீல்டு (Anfield) மைதானத்தில் நடந்த போட்டியில் லிவர்பூல் (Liverpool) மற்றும் ஸ்பார்ட்டா பிரஹா (Sparta Praha) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே லிவர்பூல் அணி கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் டார்வின் நுனெஸ் 7வது நிமிடத்தில் அசால்ட்டாக கோல் அடித்தார்.

அடுத்த நிமிடத்திலேயே பாபி கிளார்க் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோல் அடித்தார். ஸ்பார்ட்டா அணி இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா 10வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 14வது நிமிடத்தில் சாலா பாஸ் செய்த பந்தை கோடி காக்போ கோலாக மாற்றினார்.

ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஒருவழியாக ஸ்பார்ட்டா அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் வெல்ஜிகோ போராடி கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியின் 48வது நிமிடத்தில், லிவர்பூல் வீரர் டொமினிக் மிரட்டலாக ஒரு கோலும், 55வது நிமிடத்தில் காக்போ ஒரு கோலும் அடித்தனர்.

இதன்மூலம் லிவர்பூல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. முகமது சாலா அடித்த கோல் மூலம், தொடர்ந்து 7 சீசன்களில் 20 கோல்கள் அடித்த முதல் லிவர்பூல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

SHARE