கோஹ்லிக்கு ஆரஞ்சு நிற தொப்பி

172

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரருக்கும் ஊதா நிற தொப்பியும் வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டு ஆரஞ்ச் நிற தொப்பியை பெங்களூரு அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி 4 சதம், 7 அரைசதம் உள்பட மொத்தம் 973 ஓட்டங்கள் (17 ஆட்டம்) குவித்து தட்டிச்சென்றுள்ளார்.

ஒரு சீசனில் 900 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளார். 2-வது இடத்தில் ஐதராபாத் அணித்தலைவர் டேவிட் வார்னர் (848 ஓட்டங்கள், 17 ஆட்டம்) உள்ளார்.

இதே போல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பவுலரை ஊதா நிற தொப்பி அலங்கரிக்கும். இந்த வகையில் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் இந்த சீசனில் 23 விக்கெட்டுகளுடன் (17 ஆட்டம்) முதலிடத்தை பிடித்துள்ளார்.

பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 21 விக்கெட்டுகளுடன் (13 ஆட்டம்) 2-வது இடத்தை பெற்றார்.

SHARE