கோஹ்லியை சீண்டிய பிளிண்டாப்.. ஆப்பு வைத்த அமிதாப்

299
விராட் கோஹ்லியை சீண்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர் பிளிண்டாப்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார்.டி20 உலகக்கிண்ண தொடரில் அரையிறுதி வாய்ப்புக்கான நாக்-அவுட் போட்டியில் தனியாளாக கோஹ்லி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இதனால் அவரை உலகமே பாராட்டி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பிளிண்டாப் டுவிட்டரில், “கோஹ்லி இதேபோன்று தொடர்ந்து விளையாடினால் ஜோ ரூட்டை போல் சிறந்த வீரராக ஆகலாம்” என்றார்.

அவ்வளவாக பிரபலமடையாத இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுடன் கோஹ்லியை ஒப்பிட்டு பேசியதால் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆத்திரமடைந்தார்.

”ஜோ ரூட்டா.. அது யார்? ஒருவேளை இங்கிலாந்தை இந்தியா இறுதிப் போட்டியில் சந்தித்தால், அவரை வேரோடு பிடுங்கி விடும்” என்று கூறினார்.

ரூட் என்ற அவரது பெயரை வைத்து அமிதாப் கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு உடனே, ”மன்னிக்கவும் யார் இது?” என அமிதாப் பச்சனையே யார் என கேட்டார் பிளிண்டாப்.

அமிதாப்பையே யாரென கேட்டதால் கொந்தளித்த அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், பிளிண்டாப்பை சமூகவளைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

SHARE