கோஹ்லியை தடுப்பது எப்படி? தவான், ரோஹித்தை வைத்து கிண்டலாக பதிலளித்த டேரன் சமி

221
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமியின் கிண்டல் பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.டி20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணியில் தொடக்க ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது.

டி20 உலகக்கிண்ண தொடருக்கு முன் அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த தொடக்க வீரர்கள் ரோஹித், தவான் டி20 உலகக்கிண்ண தொடரில் மோசமாக ஆடி வருகின்றனர்.

அனைத்துப் போட்டிகளையும் கோஹ்லி, யுவராஜ், டோனி தான் கடைசியில் போராடி வெற்றி பெற வைக்கின்றனர்.

இதனாலே டோனி, “கோஹ்லி மட்டுமே எல்லா போட்டிகளையும் வெற்று கொடுக்க மாட்டார்” என்று ரோஹித், தவானுக்கு மறைமுகமாக குட்டு வைத்தார்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமியும் தன் பங்கிற்கு ரோஹித், தவானை கலாய்த்து தள்ளியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோஹ்லியை தடுக்க ஏதும் திட்டம் வைத்திருக்கிறீர்களா என்று சமியிடம் கேட்ட போது, “தொடக்க வீரர்கள் ரோஹித், தவான் விக்கெட்டை வீழ்த்த மாட்டோம். இது தான் எங்கள் திட்டம்” என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.

டி20 உலகக்கிண்ண தொடரில் ரோஹித், தவான் சிறப்பான தொடக்கம் கொடுக்க தவறி வருவதையே அவர் இப்படி சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதால் கோஹ்லியை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது தெரியும் என்று கூறிய சமி, ஆப்கான் அணிக்கு எதிரான தோல்வி ஒன்றும் பெரிய விடயமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE