கோஹ்லி என்னும் ஓட்ட இயந்திரத்தை நிறுத்த எங்களிடம் திட்டம் உள்ளது

303

இந்திய நட்சத்திர துடுப்பாட்டக்காரர் விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சிறந்த கட்டத்தில் இருப்பதாகவும், களத்தில் அவர் முற்றிலும் கட்டுக்கடங்காமல் திகழ்ந்து வருவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

மும்பை அணி பெங்களூர்அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு லீக் போட்டியிலும், கோஹ்லியை விரைவில் களத்தை விட்டு வெளியேற்றி, இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றோம்.

எனினும், பிளே ஆப் சுற்றில் கோஹ்லியை சமாளிக்கும் திட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருக்கின்றது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுவரை, நான்கு சதத்துடன் 865 ஓட்டங்கள் குவித்துள்ள கோஹ்லி என்னும் ஒரு ஒட்ட இயந்திரத்தை நிறுத்த தேவையான திட்டம் எங்களிடம் உள்ளது.

விராட் கோஹ்லி தனக்கு தானே ஜம்பவானாக திகழ்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டை அவர் ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்து செல்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் கடந்த சில மாதங்களாக அவருடன் நெருக்கமாக விளையாடி வருகிறேன், கோஹ்லி மிகவும் கடினமான உழைப்பாளி,எப்போதும் சிறந்து விளங்கவே அவர் விரும்புவார்.

கோஹ்லி தனது உடற்பயிற்சி தரத்தின் மூலம் இந்திய கிரிக்கெட்டில் ஒரு அடையாளத்தை அமைத்துள்ளார்.

இளநிலை முதல் மூத்த வீரர்கள் வரை கோஹ்லியின் உடற்பயிற்சி முறையை உத்வேகமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE