கோஹ்லி தனது ஆக்ரோஷ அணுகுமுறையை தொடரவேண்டும்: சொல்கிறார் டோனி

225
விராட் கோஹ்லி தனது ஆக்ரோஷ அணுகுமுறையை கைவிடக்கூடாது என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.வாழ்வா.. சாவா ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை கதிகலங்க வைத்த கோஹ்லி 51 பந்துகளில் 82 ஓட்டங்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

கோஹ்லியின் இந்த அபார ஆட்டம் பற்றி டோனி கூறுகையில், “இந்த இன்னிங்ஸ் நம்பமுடியாத ஒன்று.

உண்மை என்னவெனில் இந்த ஆடுகளம் துடுப்பெடுத்தாட எளிதாக இல்லை. குறிப்பாக சுழல்பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடுவது கடினமாக இருந்தது.

ஆனால் அவுஸ்திரேலிய அணியில் சுழல் ஆதிக்கம் இல்லை என்பது இந்திய அணிக்கு நல்லதாக அமைந்தது.

கோஹ்லியினுடைய இன்னிங்ஸ் அருமையானது. எந்த இடத்தில் ஓட்டங்கள் இருக்கிறது, பெரிய ஷாட்களை எங்கு ஆடுவது என்ற விதத்தில் அவரது தெரிவு அபாரமானது.

ஓட்டங்களை விரைவில் ஓடி எடுப்பதிலும் அபாரமானவராகத் திகழ்கிறார். அமைதியாக இருந்தால் சரியான முடிவை எடுக்க முடியும்.

அமைதியாக இருப்பது நல்ல குணம் என்றாலும் கோஹ்லி தனது ஆக்ரோஷ அணுகுமுறையையும் கைவிடக்கூடாது என்றே நான் கருதுகிறேன்.

இதுதான் கோஹ்லியிடம் மிகவும் பிரமாதமான ஒன்று. அதுதான் அவருக்கு பலம். இப்போதைக்கு அவரது துடுப்பாட்டம் அற்புதமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

SHARE