கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ள நடிகர்

201

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான இயக்குனர் என்றால் அது கௌதம் வாசுதேவ் மேனன் தான். இவரது இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்ததாக வெளிவர உள்ளன.

இந்நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி கௌதம் மேனன் அடுத்ததாக விஷாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளாராம்.

விஷால் தற்போதைக்கு அயோக்யா என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இது முடிந்த பிறகு நான் சிவப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி படங்களை இயக்கிய திருவின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதெல்லாம் முடிந்த பிறகு தான் கௌதம் மேனன் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

SHARE