க்ரீன் டீ தூளில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில்.

156

க்ரீன் டீ தூளில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

பல்வகைத் தேயிலைத் தூள்கள், அவற்றை அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தினர் ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். நாம் அருந்தும் க்ரீன் டீ தூளில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எடுத்துக் கொள்வது கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் க்ரீன் டீயில் சேர்ந்துள்ள கேட்டசின் எனப்படும் பொருளும் கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே நாள் ஒன்றுக்கு 800mg அதிகமாக கிரீன் டீ உட்கொள்பவர்களுக்கு அதிக உடல்நல அபாயங்கள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் குறைந்த அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கும் கிரீன் டீ அருந்துவதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE