க.பொ.த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு

186
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இம்முறை கல்விப் பொதுத் தர சாதாரண  பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று சட்டத்தரணி வே. தேவசேனாதிபதி தலைமையில்  இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கு விஞ்ஞான ஆசிரியர் வே.சுந்தரேஸ்வரன் , மற்றும் பிரபல ஆசிரியர்களால் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் முதல் நாளான இன்று வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் மாணவிகள் இக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இந் நிலையில் கருத்தரங்கிற்காக வருகை தந்த மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் நிமித்தம்   மண்டபத்திற்கு வெளியேயும் கருத்தரங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இக்கருத்தரங்கில் உள்ளடக்கப்படுவார்கள் எனவும் கருத்தரங்கு ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கருத்தரங்கின் போது இலவசமாக  கையேடுகள், வினாவிடைப் புத்தகங்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
SHARE