கடந்த உயிர்த்த நாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள சகல இந்து ஆலங்களிலும், சகல கிறிஸ்த்தவ தேலாலயங்களிலும், மணி ஒலிக்கச் செய்து மாவட்டத்திலுள்ள அனைவரினது வீடுகளிலும் தீபமேற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வெய்ஸ் ஒவ் மீடியா காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன்போது தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன், அவ்வமைப்பின் உறுப்பினர்களான கே.வைத்தியலிங்கம், வ.கமலாதாஸ், த.கோபாலகிருஸ்ணன், எஸ்.நகுலேஸ்வரன், யோ.றொசாந், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.