சகோதரருக்கு பார்சலில் வெடிகுண்டு அனுப்பிய நபருக்கு நேர்ந்த சோகம்

160

கனடாவில் சகோதரருக்கு பார்சலில் வெடிகுண்டு அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

வான்கூவரில் லீயோன் நிப்பர் (73) என்பவர் தனது சகோதரர் ரோஜருக்கு கடந்த 11-ஆம் திகதி பார்சலில் ஒரு மர்மபொருளை அனுப்பினார்.

பார்சலை ரோஜர் பிரித்த போது அதில் வெடிகுண்டு இருந்த நிலையில் வெடித்தது.

இதில் கை விரல்கள் சிலவற்றை இழந்த ரோஜர் படுகாயமடைந்தார்.

இது சம்மந்தமாக கைது செய்யப்பட்ட நிப்பர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று முன் தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிப்பர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நிப்பரின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவரின் இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE