சங்ககாரா வரிசையில் புதிய மைல்கல்லை எட்டிய இலங்கை வீரர்

161

சர்வதேச கிரிக்கெட்டில் 100-க்கும் அதிகமானவர்களை அவுட்டாக்கிய ஐந்தாவது இலங்கை விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டிக்வெல்ல படைத்துள்ளார். நிரோஷன் டிக்வெல்ல தற்போது வரை விக்கெட் கீப்பராக மொத்தம் 105 பேரை அவுட்டாகியுள்ளார்.

இப்பட்டியலில் குமார் சங்ககாரா 671 பேரை விக்கெட் கீப்பராக இருந்து அவுட்டாக்கி முதலிடத்தில் உள்ளார். கலுவித்தரனா 325 பேரை அவுட்டாக்கி இரண்டாமிடத்திலும், பிரசன்னா ஜெயவர்தனே 161 பேரை வீழ்த்தி மூன்றாமிடத்திலும், சண்டிமால் 127 பேரை வீழ்த்தி நான்காமிடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் டிக்வெல்ல ஐந்தாமிடத்தில் உள்ளார்.

SHARE