சசிகலாவுக்கு நேர்ந்த துயரம்

216

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உள்ள சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அதிமுக-வினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக-வின் தற்காலிக பொதுச்செயலாளரான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளியாக, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட பின்பு சசிகலா பல்வேறு வசதிகள் கேட்டதாகவும், அதற்கு சிறை நிர்வாகம் முன்பு மறுப்பு தெரிவித்துவிட்டு, பின்னர் சகலவசதிகள் செய்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி பொதுவாக, ஒரு கைதியை வாரத்திற்கு 3 முறை மட்டுமே உறவினர்கள் சந்தித்து பேச முடியும்.

அதிலும் அவர்களுக்கு ஒரு மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால் சசிகலா அங்கு அடைக்கப்பட்டது முதல் அனுதினமும் உறவினர்கள், வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் சென்று அவரை சந்தித்து பேசி வந்துள்ளனர். அதுவும் 5 மணி நேரத்திற்கும் மேல் அவர்களின் சந்திப்பு நீடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறையில் இருக்கும் சக கைதிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் விழித்துக் கொண்ட சிறை நிர்வாகம், தற்போது சசிகலாவிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால்தான், சில நாட்களுக்கு முன்பு, அவரை சந்திக்க சென்ற வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர். சரஸ்வதி ஆகியோருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது சசிகலாவை சந்திக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE