
சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த `பேட்ட’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக `நாடோடிகள் 2′ ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரியில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சசிகுமார் தற்போது, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் `கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சசிகுமாரின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை சுந்தர்.சி.-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் இயக்குகிறார்.