சச்சினின் பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும்: தள்ளுபடி செய்யப்பட்ட மனு

249

014

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற கோரி செய்யப்பட்ட மனுதாக்கலை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 2014 ம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது.

இது குறித்து வி.கே.நாஸ்வா என்பவர் டெண்டுல்கர் விளம்பரங்களில் நடித்து வருகிறார்,மேலும் அவரை பாரத ரத்னாவாக சித்தரித்து சில புத்தகங்கள் வெளிவருவதால் பாரத ரத்னா விருதுக்கு களங்கம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, விசாரணையில் சச்சின் டெண்டுல்கரை யாரோ ஒரு நபர் பாரத ரத்னா என்று கூறி புத்தகம் எழுதுவதற்கு, அவர் எப்படி பொறுப்பாக முடியும்.

பாரத ரத்னா விருது பெற்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி இந்த வழக்கை தீபக் மிஸ்ரா மற்றும் சந்திர சூட் ஆகிய அமர்வு கொண்ட நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

SHARE