சச்சினை ஓய்வு பெற கட்டாயப்படுத்தினர். பரபரப்பை கிளப்பும் கருத்து

141

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தானாக ஓய்வை அறிவிக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் தேர்வாளர் குழுவின் தலைவர் தற்போது தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆனால் சச்சின் தானாக ஓய்வு எடுக்க முன்வரவில்லை என்றும், கட்டாயப்படுத்தியதன் விளைவாகத்தான் ஒருநாள் போட்டிகளிலிருந்து சச்சின் ஓய்வு பெற்றதாகவும் இந்திய தேர்வாளர் குழுவின் முன்னாள் தலைவர் சந்தீப் பாட்டீல் தற்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய தேர்வாளர்கள் அனைவரும் சச்சின் டெண்டுல்கரை ஒருமித்த கருத்துடன் நீக்குவதாக திட்டமிட்டிருந்தோம்.

இதன் காரணமாக சச்சினை சந்தித்து எதிர்கால திட்டம் குறித்து சச்சினிடம் விவாதித்தோம். அதற்கு அவர் தற்போதைக்கு ஓய்வு பெறும் நிலையில் இல்லை என தெரிவித்தார் என்று சந்தீப் பட்டீல் கூறினார்.

இதனால் சந்தீப் பட்டீல் தேர்வாளர்களின் ஒரு மித்த கருத்தையும், சச்சினின் கருத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சினை தொடர்பு கொண்டு தேர்வாளர்களின் கருத்தை தெரிவித்துள்ளது.

இதன் பின்னரே சச்சின் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு வேலை சச்சின் ஒய்வை அறிவிக்காமல் இருந்திருந்தால், நாங்களே அவரை அணியிலிந்து நீக்கியிருப்போம் என சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

SHARE