சச்சினை கலங்க வைத்த தங்க மகன் மாரியப்பன்

228

அண்மையில் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மாரியப்பன், தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

அதேபோல் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் வருண் பாட்டியா வெண்கலப் பதக்கக்கமும் வென்றனர்.

இந்நிலையில் நாட்டுக்கு பெருமை சேர்த்த இவர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.

விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

விழாவில் பேசிய சச்சின், “இந்தியாவை பெருமைப்படுத்திய இந்த நான்கு வீரர்கள் குறித்தும் நானும் பெருமிதம் கொள்கிறேன். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்குள்ளும் ஏராளமான சோதனைகள் துயரங்கள் இருக்கும்.

ஆனால் இவர்கள் சந்தித்தது போல பிற விளையாட்டு வீரர்கள் சந்தித்திருக்க முடியாது. இந்த விழாவுக்கு அழைத்து என்னை கவுரவப்படுத்தியதற்கு நன்றி” என்றார்.

625-0-560-320-500-400-194-800-668-160-90-12

இதைத் தொடர்ந்து மாரியப்பன் பேசியது அனைவரையும் நெகிழச் செய்தது.

அவர் பேசுகையில், சாதிக்க வேண்டும், எனது அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

நான் சிறுவனாக இருக்கும் போது என்னை விளையாடக் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அப்போது தான் நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

ரியோவில் பதக்கம் வென்ற பிறகு அங்கு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது, எனது கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேசத்திற்காக சாதித்த பெருமிதம் எனக்குள் ஏற்பட்டது” தெரிவித்தார்.

மாரியப்பனின் பேச்சு சச்சின் உட்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கலங்க செய்தது.

625-0-560-320-500-400-194-800-668-160-90-13 625-0-560-320-500-400-194-800-668-160-90-14

 

 

SHARE