சச்சின் படத்திற்கும் தெறி படத்திற்கும் இத்தனை ஒற்றுமையா? ஸ்பெஷல்

304

சச்சின் படத்திற்கும் தெறி படத்திற்கும் இத்தனை ஒற்றுமையா? ஸ்பெஷல் - Cineulagam

இளைய தளபதி விஜய் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த படம்சச்சின். இப்படம் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கிய படம் என்றே கூட கூறலாம்.

ஏனெனில் இந்த படத்தில் விஜய்யை பிடிக்காதவர் யாரும் இல்லை, அந்த அளவிற்கு தன் துறுதுறு நடிப்பில் அசத்தியிருப்பார். அதிலும் இவருக்கும் ஜெனிலியாவிற்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்நிலையில் இப்படத்திற்கும் தெறி படத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளது. சச்சின் படமும் ஏப்ரல் 14ம் தேதி தான் ரிலிஸ் ஆனது, அதேபோல் தெறி 11 வருடம் கழித்து ஏப்ரல் 14ம் தேதி தான் வெளிவரவுள்ளது.

மேலும், இந்த இரண்டு படத்தையும் கலைப்புலி தாணு அவர்கள் தான் தயாரித்திருந்தார். மேலும், அதிலும் ஜெனிலியா, பிபாஷாபாசு என இரண்டு ஹீரோயின்கள், தெறியிலும் சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு ஹீரோயின்கள்.

இதைவிட சச்சின் படத்தை இயக்கியவர் யார் தெரியுமா? ஜான் மகேந்திரன், தெறி படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன்அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE