
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
பொரளை கொட்டா வீதியில் அமைந்துள்ள வீடே இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது.
கோட்டே நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இந்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.
வீட்டை சோதனையிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
நிதிச் சலவை செய்தல் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2011, 2012ம் ஆண்டு உள்ளிட் சில ஆண்டுகளுக்கான சொத்து விபரங்களை சஜின் வாஸ் குணவர்தன வெளியிடவில்லை எனத் தெரிவித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.