சடலத்தினால் ஏற்பட்ட குழப்பம்: பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

21

 

தொழிலதிபர் ஒருவரின் சடலத்தினை அவரது இரண்டு மனைவிகளும் உரிமைக்கோரியதனால் மலர்சாலையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வலான பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வர்த்தகருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும், அவர் இறக்கும் போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
குறித்த நபரின் முதல் மனைவி சட்டத்தரணி என்றும், இரண்டாவது மனைவி பிரதேச செயலக உத்தியோகத்தர் எனவும், இருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய, பாணந்துறை மரண விசாரணை அதிகாரி துமிந்த அதிகாரம் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது சட்டத்தரணி மனைவி இறந்த கணவரின் உடலை தனது வீட்டில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும்,இறுதி அஞ்சலியை தடையின்றி நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கு இரண்டாவது மனைவி,உறவினர்கள்,நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம் பதிவு
இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமான நிலைக்கு வராமையினால், பொலிஸாரின் தலையீட்டில் மலர்சாலையில் சடலம் வைக்கப்பட்டு பின்னர் புதைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இறந்தவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் வரை எவ்வித மோதலுமின்றி இரு தரப்பும் செயற்பட இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE