சட்டமா அதிபரிடம் கேள்வி கேட்கும் மஹிந்த தரப்பு

267
அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சட்டமா அதிபரிடம் இந்தக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8ஆம் திகதியன்று ஏற்படுத்தப்பட்ட 100 நாள் அரசாங்கத்திலும் ஆகஸ்ட் 17ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட தேசிய அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் மீது லஞ்ச ஊழல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது

SHARE