சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பதவிக்கு சாகல ரத்னாயக்க மற்றும் டி.எம் சுவாமிநாதன்!

300

அமைச்சர் திலக் மாரப்பன, சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE