சட்டவிரோதமாக அரிமரங்களை கடத்தி சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது

284

சட்டவிரோதமாக அரிமரங்களை கடத்தி சென்ற மூன்று சந்தேகநபர்கள் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக நேற்று காலை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த காட்டுப்பகுதிக்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியாவை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடம் இருந்து கப் ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின் இன்றைய தினம் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

SHARE