ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்போர் நாட்டில் இருந்து செல்வதற்கான ஆயத்தங்களை செய்யும் காலக்கட்டத்தில் ஒரு குறுகிய காலத்துக்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடியேறிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிரான்ஸிஸ் க்ரீபே அண்மையில் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கையிலேயே ரவிநாத் ஆரியசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் தமது குற்றச்சாட்டில் இலங்கையில் வீசா ஒழுங்கு மீறல் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் பிரச்சினை, குற்றமாக கருதப்படாது எனவும், அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. எனினும் அவர்கள் நாட்டில் இருந்து அனுப்பப்படும் வரை அவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.