சட்டவிரோத ஆட்கடத்தல்! இலங்கை – இந்தோனேஷியாவுக்கு இடையில் உடன்பாடு

279

dsd

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கைக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கையும் இந்தோனேஷியாவும் இணங்கியுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேஷியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அந்த நாட்டின் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையிலிருந்தும், தமிழ் நாட்டில் இருந்தும் அதிக அளவான ஈழ அகதிகள் இந்தோனேஷியாவின் ஊடாகவே அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.

இதற்கான விசேட திட்டங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE