சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்து:

288
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்து:

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சட்;டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் எவரும் நாட்டில் குடியேற்றப்பட மாட்டார்கள் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக புகலிடம் கோரும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதப் படகுப் பயணம் குறித்த அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE