கிழக்கு கடற்படை மற்றும் கிண்ணியா பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர் 31 வயதுடைய கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இவரால் சட்ட விரோமாக கொண்டு செல்லப்படவிருந்த மணல் தொகை டிரக்டர் வாகனத்துடன் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
டிரக்டருடன் மீட்கப்பட்ட மணலும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.