சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேரை பல்வேறு பகுதிகளில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
உப்பூரல் மற்றும் கல்லடி பகுதிகளில் 13 பேர் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 400 கிலோகிராம் மீன்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் மூன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேநேரம், பூநகரி பகுதியில் கடந்த 16ஆம் திகதி 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட ஒரு வலையும், 750 கிலோகிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மட்டக்களப்பு குடா பகுதியில் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் நேற்று தெரிவித்துள்ளனர்.