சதீஷ் – சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

232
சதீஷ் - சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

சதீஷ் – சிந்து
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சதீசுக்கும், வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாக்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
சதீஷின் பதிவு
 இந்நிலையில் நடிகர் சதீஷ்-சிந்து தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
SHARE