சத்தப்பந்து கிரிக்கட் போட்டி – விழிப்புலன் பாதிக்கப்பட்டோரின் புதிய முயற்சி

266
கண் பார்வை அற்றோர் கிரிக்கட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு எங்கிலும் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுக்கின்றார்கள். ஓசை கொண்ட பந்து அவர்களுக்கு உதவுகின்றது.
அவாறான விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளையாடும் சத்தப்பந்து கிரிக்கட் போட்டி திங்கள்கிழமை  08.08.2016 , பரந்தன் இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி 2016 ,  விழிப்புல‌ன் பாதிக்கப்பட்டோருக்கான  சத்த‌ பந்து கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பமாகின்றது . அடுத்த நிகழ்வாக 20.08.2016 இல் சக்கர நாட்காளி கூடைப்பந்தாட்டப்போட்டிகள் வவுனியாவில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பில் 28.08.2016 இலும் வவுனியாவில் 04.09.2016 இலும் நடைபெறவுள்ளன.
சத்தப்பந்து கிரிக்கட் போட்டிகள் வடக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் கிழக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் இடையில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளை  யாழ் விழிப்புணர்வற்றோர் சங்கம் ஏற்பாடு செய்கின்றது அதற்கான அனுசரனையை லண்டணை தளமாகக் கொண்டியங்கும் நம்பிக்கை ஒளி அமைப்பு வழங்குகின்றது.
இவ்விளையாட்டுக்கள் எவ்வாறு நடைபெறும் என்பதையும் , தாம் அதன் பயிற்சிகளை எவ்வாறு செய்கின்றனர்  என்பதனையும் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளக்கும் காட்சிப்படத்தை ஒருமுறை பாருங்கள்.
முற்றிலும் கண்பார்வை இழந்தவர்கள் இவ்வாறான ஒரு விளையாட்டுக்காக தாம் மைதானத்தில் இறங்கும் போது கவலைகளை மறந்து ஒரு புதிய உத்வேகத்தை அடைகின்றோம் என பெருத்த நம்பிக்கையோடு காத்திருகின்றார்கள்
அவர்களுக்கான இவ்விளையாட்டு போட்டிகளில் உங்கள் பங்களிப்பை வழங்குமாறு தமிழ் மாற்று திறனாளிகள் அன்பாக கேட்டுக் கொள்கின்றார்கள்.

SHARE